×

குடிமராமத்து திட்ட பணிகள் ஆய்வு

அரியலூர், செப். 11:அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் அரியலூர் தாலுகா அருங்கால் மற்றும் கல்லக்குடி ஆகிய கிராமங்களில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் வினய் நேற்று ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தில் 18 லட்சம் மதிப்பீட்டில் அருங்கால் ஓடை அணைக்கட்டு புனரமைக்கும் பணியினையும், கல்லக்குடி பெரிய ஏரியில் 25 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணி, வரத்துவாய்க்கால் புனரமைக்கும் பணிகளையும், பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைபெறும் பணிகளை அனைத்து உறுப்பினர்களும் தினந்தோறும் பணிகளை பார்வையிட வேண்டும். இதனால் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். மேலும், இப்பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கலெக்டர் வினய் தெரிவித்தார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் வை.வேல்முருகன், உதவி பொறியாளர் மருதமுத்து மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...