×

பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் அபராதம் மக்களுக்கு எச்சரிக்கை

பெரம்பலூர், செப். 10: அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் அனுமதியின்றி டிஜிட்டல் பதாகைகள், தட்டிகள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். உரிய முன் அனுமதியின்றி அரசு நிலங்கள், கட்டிடங்கள், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொது வெளிகளில் பொதுமக்கள் மற்றும் சாலை பயன்பாட்டாளர்கள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பரம், வரவேற்பு டிஜிட்டல் பதாகைகள் மற்றும் தட்டிகள் வைக்க வேண்டாம். அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிரானதாக அமையும். மேலும் அனுமதியின்றி விளம்பர பதாகைகள், தட்டிகள் வைப்போர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். இதில் பேனர் அச்சடிக்கும் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி