தொன்போஸ்கோ கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

தர்மபுரி, ஆக.22: தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் வரவேற்றார். கல்லூரியின் பொருளாளர் சாம்சன் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, உணவு பாதுகாப்பு நோக்கம் மற்றும் துறை செயல்பாடுகள் குறித்து பேசினார்.

தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மாவட்ட நுகர்வோர் மன்ற தலைவர் அண்ணாமலை ஆகியோர், உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ, மாணவிகளிடையே உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும், கலப்படமில்லாத உணவு பொருட்களை எப்படி தயாரிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மன்ற துணைத்தலைவர் சந்தீப் சவுத்ரி நன்றி கூறினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் வேங்கடசரவணன், பேராசிரியர்களோடு இணைந்து நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

Tags :
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருதய...