×

பொதுஅறிவை வளர்க்க மாணவிகள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்

முத்துப்பேட்டை, ஆக.22: மாணவிகள் பொதுஅறிவை வளர்க்க தினமும் செய்தி தாள்கள் படிக்க வேண்டும் என விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் அறிவுத்திறன் மேம்படுத்தும் வகையல் தினந்தோறும் செய்திதாள்கள் படிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவிகளுக்கு செய்தித்தாளின் அவசியமும் செய்தித்தாளில் பயனையும் விளக்கி பலரும் பேசினர். அதேபோல் மாணவிகள் ஒவ்வொருவரும் தினந்தோறும் பொதுஅறிவை வளர்க்கும் வகையில் செய்தி தாள் படிக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. மேலும் தினகரன் அறிவொளி திட்டத்தின் கீழ் தினந்தோறும் மாணவிகள் படிக்க தினகரன் நாளிதழ் வழங்க நன்கொடை வழங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் இபுராஹீம் என்பவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளியில் இருந்த மாணவிகள் செய்தி தாள் படித்தனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...