×

வேலுச்சாமி எம்பி உறுதி சாலை பராமரிப்பை தனியாருக்கு தாரைவார்ப்பதா? திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல், ஆக. 20: சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள 250 கிமீ தூர சாலைகளை தனியார் பராமரிப்புக்கு தமிழக அசு ரூ. பல ஆயிரம் கோடிகளை கொடுத்து தாரைவார்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளை சேர்ந்த சாலை பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம் எங்களது வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனே கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் போராட்டமாக மாற்றுவோம்’ என வலியுறுத்தப்பட்டது. இதில் சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர் அம்சராஜ், பொருளாளர் தமிழ், செயலாளர் ராஜமாணிக்கம், சாலை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நிலக்கோட்டை எத்திலோடுவில் உழவன் செயலி விழிப்புணர்வு