×

திருச்செங்கோட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா

திருச்செங்கோடு, ஆக 20: திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளி காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 22 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் மற்றும்  நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டி  ஆகியவற்றை  மின்துறை அமைச்சர்  தங்கமணி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 195 மாணவ-மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில், கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை  பயனுள்ளதாக அமையும் என்று அமைச்சர்  தங்கமணி தெரிவித்தார்.
விழாவில் பொன் சரஸ்வதி எம்எல்ஏ, டிசிஎம்எஸ் தலைவர் திருமூர்த்தி, மேலாண் இயக்குனர் ரவிக்குமார், உறுப்பினர் சபரி தங்கவேல், ஊரக வங்கி தலைவர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அங்கமுத்து, திட்டக்குழு உறுப்பினர் முருகேசன், நகராட்சி பொறியாளர் சுகுமார்,  கல்வித்துறை அதிகாரிகள்,  நகராட்சி அலுவலர்கள்  மற்றும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள்  பங்கேற்றனர்.தொடர்ந்து நெட்டவேலாம்பாளையம்- எலந்தகுட்டை மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றும் பணிக்கான பூமி பூஜையிலும் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி