×

மொரப்பூரில் ஏஐடியூசி ஒன்றிய பேரவை கூட்டம்

தர்மபுரி, ஆக.20: மொரப்பூரில் ஏஐடியூசி ஒன்றிய பேரவை கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி முனிசிபல் பஞ்சாயத்து பொதுப்பணியாளர்கள், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளனத்தின், மொரப்பூர் ஒன்றிய பேரவைக்கூட்டம் மொரப்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ராஜா வரவேற்றார். உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன் கோரிக்கைகள குறித்து விளக்கவுரையாற்றினார். ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் நடராஜன், வக்கீல் மாதையன் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில், உள்ளாட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து வகை கிராம ஊராட்சிகளில் மாதம் ₹250 ஊதியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் அனைவருக்கும், காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அனைத்து ஊராட்சி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களையும் நிரந்தப்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களை அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா