×

தர்மபுரி மாவட்டத்தில் 70.6 மி.மீ மழை பதிவு

தர்மபுரி, ஆக.20: தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தர்மபுரியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி,  பென்னாகரம், அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்): தர்மபுரி- 22, பாலக்கோடு- 18.5, மாரண்டஅள்ளி- 9.1, பென்னாகரம்- 9, அரூர்- 12 என மொத்தம் 70.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா