×

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பாலக்கோடு, ஆக.20: மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமூட்லு ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி சாஸ்திரமூட்லு கிராமத்தில், சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சொந்தமான சாஸ்திரமூட்லு ஏரியை, 35 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, போலி பட்டா தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டார். இதனால், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் சேகரமாகும் மழைநீர் தேங்காமல், சின்னாற்றில் கலந்து வீணாகி வருகிறது. எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள், கலெக்டர் மலர்விழி, அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், மாரண்டஅள்ளி சாலையில் காலி குடங்களுடன் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரளா, மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏரி நிலத்திற்கான ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் வழித்தடங்களை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் ேபரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த மறியலால் அப்பகுதியில் 1 மணி ேநரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா