டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும்

கிருஷ்ணகிரி, ஆக.14: சுதந்திர தினத்தையொட்டி, நாளை (15ம்தேதி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி நாளை (15ம்தேதி) சுதந்திர தினத்தையொட்டி மது விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப் படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுகூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். இந்த உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு