ஊத்தங்கரையில் மாணவர்களுக்கு தேசிய கொடி

ஊத்தங்கரை, ஆக.14:ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி, வண்ண காகிதம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 100 தொடக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 10 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய கொடிகளும், பள்ளி வளாகத்தை அலங்காரப்படுத்த வண்ண காகிதங்களும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  பரிசுகளை தொண்டு நிறுவன நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, பாத்திமா, கிறிஸ்டி ரூபி, சக்தி, கோமதி, லட்சுமி மற்றும் மௌலி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள் வெங்கடேசன், மோகன்குமார், மலர், மகேந்திரன், ஆசிரியர்கள் செந்தில்குமார், சக்தி, உமா, மற்றும் வட்டார கல்வி அலுவலக அலுவலர்கள் செங்குட்டுவன், கல்பனா, விஜயலட்சுமி, ஜெயபாரதி, இசைமொழி, கணேசன், திருநாவுக்கரசு, சங்கர், தங்கவேல் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆண்கள் பள்ளி ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

Tags :
× RELATED சூளகிரி அருகே யானை தாக்கி பெண் படுகாயம்