×

சீரான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி மாவட்டத்தில், சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அன்பழகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில்,தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் ஏற்பட்ட கலங்கல் தன்மையால், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து, சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில், அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள், இரவு நேரங்களில் முழுமையாக எரிய வேண்டும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும். குடிமராமத்து பணிகளை விரைவாக, செம்மையாக செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 ஊராட்சிகளில் பழுதான போர்வெல்கள், ஆழ்துளை கிணறுகள், கைப்பம்புகள் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் சரிசெய்ய இயலாதவைகளை மாற்றி, புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும். தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா