×

கடத்தூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கவர் பறிமுதல்

கடத்தூர், ஆக.14: கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகாரித்துள்ளதாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கடத்தூர் நகரில் உள்ள மளிகை கடைகள், ஹோட்டல், பேக்கரி, தள்ளுவண்டி கடைகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது கடைகளில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து சாலையோர உணவு கடைகளில், உணவு வழங்க பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதற்கு பதிலான, வாழை இலை, பாக்கு மட்டை, பட்டர் பேப்பர்களை பயன்படுத்தும்படி, கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா