×

வேலூர், விழுப்புரத்தில் இருந்து இன்று கிரிவல பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்


திருவண்ணாமலை, ஆக. 14: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதந்தோறும் பவுர்ணமி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.அதன்படி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணி மற்றும் நாளை இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.

அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து நாளை அதிகாலை 4 மணி மற்றும் நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில்கள் காலை 5.55 மணிக்கு வேலூர் சென்றடையும். அதேபோல், விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், இன்று இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மேலும், நாளை இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். திருவண்ணாமலையில் நாளை அதிகாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. அதேபோல், நாளை மறுதினம் அதிகாலை 3.15 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்