சுதந்திர தினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

அரியலூர், ஆக. 14: சுதந்திர தினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது.சுதந்திர தினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் நாளை இயங்காது. மேலும் மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது. இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...