பெண் மாயம்

ஜெயங்கொண்டம், ஆக. 14: ஜெயங்கொண்டத்தில் மனைவியை காணவில்லையென போலீசில் கணவர் புகார் செய்தார். அதன்பேரில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சோழவந்தான் தென்கரையை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் வீரய்யா (27). இவரும், சுரேய்யாவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தற்போது ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீரய்யா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி சுரேய்யா (19), கணவர் வீரய்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு சித்தி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகுநாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரது சித்தி வீடு, உறவினர்கள், தோழிகள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வீரய்யா புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

Tags :
× RELATED கோக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு