×

சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சியில் பருத்தியை வாரி இறைத்த விவசாயிகள்

சங்கரன்கோவில், ஆக. 14:  சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சியில், விவசாயம் செழிக்க வேண்டி பருத்தியை வாரி இறைத்து விவசாயிகள் வழிபட்டனர். சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா, கடந்த 3ம் தேதி தேதி துவங்கியது. 9ம் திருவிழாவன்று கோமதி அம்பாள் தேரோட்டம் நடந்தது. நேற்று தபசுக்காட்சி நடைபெற்றது. அப்போது சங்கர நாராயணர், கோமதிஅம்பாள் சப்பரங்கள் மீது விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல், வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களை தூவி வழிபட்டனர்.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், மானாவாரி விவசாயம் நடைபெறும் இடங்களாகும். இப்பகுதியில் இந்தாண்டு பருத்தி விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயிகள் திரளானோர் பருத்தியை வாரி இறைத்தனர். மேலும் தபசு காட்சியின்போது அம்மன் மனம் குளிரும் வகையில் விவசாய பொருட்களை தூவி வேண்டினால் அந்தாண்டு விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

ஆடித்தபசு நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் ஆறுமுகம், வேல்சாமி, கோமதி அம்பாள் மெட்ரிக். பள்ளி முதல்வர் திலகவதி, தலைமை ஆசிரியர் பழனிசெல்வம், நிர்வாக இயக்குநர் ராஜேஷ்கண்ணா, மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் திவ்யா ரெங்கன், நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர், எஸ்டிஎஸ் திலீப்குமார், எஸ்டிஎஸ் சரவணக்குமார், நகர காங். பொருளாளர் மனோகரன், காங்கிரஸ் நிர்வாகி சித்திரைக்கண்ணு, சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், அரசு ஒப்பந்ததாரர் மாரியப்பன், அமமுக புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் பாலசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் முருகராஜ், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கதிரேசன், நகர இளம்பெண்கள் பாசறை செயலாளர் மணித்தாய் முருகராஜ், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் மணிகண்டன், நகைக்கடை அதிபர்கள் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், எஸ்ஆர்எல் வேணுகோபால், சிஎஸ்எம்எஸ் சங்கரசுப்பிரமணியன், அரசன் சங்கரன், அனுசுயா மாரிமுத்து, அமுதா செல்வம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, வெள்ளி மாரியப்பன், முருகன், கேஎஸ்பி பழனியாண்டி, ரெட்கிராஸ் சங்கரன்கோவில் கிளை தலைவர் அரிகரசுப்பிரமணியன், தபால் நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், கோமதி அம்பாள் மாதர் சங்க தலைவர் பட்டமுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், பிச்சையா பாஸ்கர், மாதவராஜ்குமார் மற்றும் முப்பிடாதி, மணிகண்டன், கணேசன், மகாராஜன், முத்து ராமகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு