அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்னையால்

அரக்கோணம், ஆக: 11: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே குடும்ப பிரச்னையால் பிளேடால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, டவுன் இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர், பெங்களூருவை சேர்ந்த நவீன்(28) என்பது தெரிய வந்தது. மேலும், குடும்ப பிரச்னை மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் இறந்து போனதால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக, தன்னை தானே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.    

Tags :
× RELATED சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு