×

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திருடு போன அதிக வாட்ஸ் பவர் லைட்டுகள், தாமிர வயர்கள் பொருத்தப்படுமா? புதிய டிஎஸ்ஓ நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை, ஜூலை 23: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திருடு போன மின்விளக்குகள், தாமிர வயர்களை பொருத்த புதிய மாவட்ட விளையாட்டு அலுவலர்(டிஎஸ்ஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரவு மின்னொளியில் விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதற்காக நான்கு புறங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட 70மீட்டர் உயரமுள்ள கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தில் உள்ள கோபுரத்தில் இருந்த சக்தி வாய்ந்த 4 மின்விளக்குகளும், இதனை எரிக்க உதவும் விலை உயர்ந்த தாமிர வயர்களை மர்ம நபர்கள் அறுத்துச் சென்று விட்டனர். இத்திருட்டு நடந்து கடந்த 4 ஆண்டுகளாகி விட்டது. இரு கோபுரங்களில் உள்ள மின்விளக்குகளை எரிக்க முடியவில்லை. இரவில் மின்னொளியில் போட்டிகள் நடத்த முடியவில்லை.இது குறித்து விளையாட்டுச்சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘சர்வதேச அளவிலான போட்டிகள் ரேஸ்ேகார்ஸ் மைதானத்தில் நடந்துள்ளது. தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளும் நடந்திருக்கிறது. விளக்குகள் பொருத்தாமல் இருப்பதால் மின்னொளியில் ேபாட்டிகளை நடத்த முடியவில்லை. தேசிய, மாநில போட்டிகள் வேறு மாவட்டத்திற்கு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. புதிய புதிய மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் பொறுப்பேற்கின்றனர். ஆனால் அவர்கள் திருடு போன விளக்குகளை எரிக்க வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், விளக்குகளை எரிக்கச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு விளக்குகள் மற்றும் காப்பர் வயர்களை புதிதாக பொருத்தி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை வெளிச்சம் பரவச்செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...