×

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

போச்சம்பள்ளி, ஜூலை 23:  கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என செல்லகுமார் எம்பி கூறினார்.கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார், நேற்று போச்சம்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை பணிகள், கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் குளிர் பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். ஓசூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள டோல்கேட்டை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் நலன் கருதி, பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்பது குறித்து, கலெக்டருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது,’ என்றார். அப்போது, சுப்பிரமணியன், கோவி.சிற்றரசு, மனோகரன், முத்துகுமார், ஆறுமுகம், விவேகானந்தன், வக்கீல் ராமமூர்த்தி, சத்தியசீலன், சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு