×

கல்லிடைக்குறிச்சியில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

அம்பை, ஜூலை 23:  கல்லிடைக்குறிச்சி இயக்கம் சாரா இளைஞரணி சார்பில்  மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை தலைமை வகித்து பள்ளி மாணவர்கள் 77 பேருக்கு  இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினார். பேரூராட்சி முன்னாள் தலைவர் இசக்கிபாண்டியன், செயலாளர் ராஜா அப்துல்ஹமீது முன்னிலை வகித்தனர். இயக்கம் சாரா இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அமீன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ராம்ராஜா, ஆசிரியர்கள் சுந்தரலட்சுமி, சுந்தரி, பிரேனாபீர்பாய்,  இயக்கம் சாரா இளைஞரணி தலைவர் அசாரூதீன், செயலாளர் சாகுல்ஹமீது மற்றும் மன்சூர், பெரிய ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் அப்துல்மஜீத், எஸ்டிபிஐ சுலைமான், வியாபாரி சங்க துணைத்தலைவர் காஜாமைதீன், அய்யப்பன், ஷாஜஹான், ராஜா, உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர். இயக்கம் சாரா இளைஞரணி தலைவர் அசார் நன்றி உரை கூறினார்.

Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது