கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை18: நாமக்கல்லில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், நாமக்கல்லில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 மாத ஊதியக்குழு நிலுவையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சிவப்பு நிற சட்டை மற்றும் வெள்ளை நிற தொப்பி அணிந்து கோஷமிட்டனர்.

Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் 3106 பதவிகளுக்கு...