காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் கட்டிடத்தில் நூலகம்

காரிமங்கலம், ஜூலை18: காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே, பழைய போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஊர் நடுவே அமைந்துள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் ேபாலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தர்மபுரி சாலையில் புதிய கட்டிடத்திற்கு, காரிமங்கலம் ேபாலீஸ் ஸ்டேஷன் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பழைய ேபாலீஸ் ஸ்டேஷன், கடந்த 8ஆண்டுகளாக பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் கட்டிடம் முழுவதும் பாழடைந்த நிலையிலும், போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும் மாறியுள்ளது. காரிமங்கலத்தில் நூலகத்திற்கான சொந்த இடம் இல்லாததால், தனியார் கட்டிடத்தில் பாலக்கோடு ரோட்டில்  நூலகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, பாழடைந்த பழைய போலீஸ் ஸ்டேஷனை சீரமைத்து, நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.    Tags :
× RELATED சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி