நல்லம்பள்ளி அருகே ஓடை புறம்போக்கில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள்

தர்மபுரி, ஜூலை 18: நல்லம்பள்ளி நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நார்த்தம்பட்டி சவுளுக்கொட்டாய் பகுதியில், ஓடை புறம்போக்கு நீர்வழித் தடம் உள்ளது. இடுகாட்டு புறம்போக்கு நிலமும் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து மாட்டுக்கொட்டாய், மாட்டு பண்ணை அமைத்து உள்ளனர். இதன் அருகில் ஒகேனக்கல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளது. மாட்டின் சாணம், கோமியம் தேங்கி உள்ளதால் அதிலிருந்து ஈ, கொசுக்கள் உற்பத்தியாகி இந்த குடிநீர் தொட்டியில் கலக்கும் நிலை உள்ளது. இந்த குடிநீரை குடித்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓடை புறம்போக்கு நீர்வழித் தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புளுதியூர் சந்தையில் 33 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை