காலியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரியில், மின்வாரிய அலுவலகங்களில் காலியிடங்களை  நிரப்பக்கோரி, மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர், மத்திய அமைப்பு தர்மபுரி மின்திட்ட கிளை சார்பில், மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத்தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். ஜீவா, விஜயா, சக்திவேல், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்ப ேவண்டும். பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு, 2 மணி நேர வேலை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். துப்புரவு பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags :
× RELATED கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி...