×

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா

அந்தியூர், ஜூலை 18:  அந்தியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடி தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இதில் மாநில அளவிலான குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தை நடப்பது உலகப் புகழ் பெற்றது. மேலும் இங்கு நடக்கும் குதிரை, மாடுகள் உள்பட கால்நடைகள் சந்தை தென்னிந்திய அளவில் இரண்டாவது மிகப்பெரிய சந்தை ஆகும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஆடி திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.    இதை முன்னிட்டு குருநாத சுவாமி வன கோயிலில் உள்ள குருநாத சுவாமி, பெருமாள், காமாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு, பூஜைகளுடன் பூச்சாட்டுதல் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


x

Tags :
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்