×

காமராஜர் பிறந்த நாள் விழா

பெரம்பலூர்,ஜூலை16: காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா. பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது.பெரம்பலூரில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழாவையொட்டி புதுபஸ்டாண் டிலுள்ள காமராஜர் திருஉருவச்சிலைக்கு,மாவட்ட காங்கிரஸ் கட்சியின்சார்பாக அதன் மாவட்டத்தலைவர் தமிழ்ச்செல்வன்தலைமையில் மாலைஅணிவித்து மரியாதை செலுத் தினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக புதுபஸ்டாண்டிலுள்ள காமராஜர் சிலைக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் மாலைஅணிவித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...