×

லேப்டாப் கேட்டு பூலாம்பாடி பள்ளி முன்னாள் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

பெரம்பலூர், ஜூலை 16: பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கள் தங்களுக்கு லேப்டாப் கேட்டு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தமிழகத்தில் கடந்தமாதம் ஈரோட்டில் லேப்டாப் கேட்டுமறியலில் ஈடுபட்ட மாண வ,மாணவியரை போலீசார் தடியடிநடத்தி கலைத்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரம் பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பெரம்பலூர்அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஜூன் 26ம்தேதி பள்ளியை முற்றுகையிட்டு 2017-2018, 2018-2019ம் கல்வி யாண்டுக்கு 678பேருக்கு இலவச லேப்டாப்களை வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து குரும்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளி, கை.களத்தூர் அரசுமேல் நிலைப்பள்ளி, பெரம்பலூர் ரோவர்மேல்நிலைப்பள்ளி, களரம்பட்டி ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசுமேல்நிலைப் பள்ளி, எசனை அரசு மேல்நிலைப் பள்ளி, வெங்கலம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.அதில் பெரம்பலூர்அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 3வாரங்களில் 3முறை சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் கை.களத்தூரில் மறியல்போராட்டம் நடத்திய நிலையில் சிலநாள் கழித்து பெரம்பலூர் கலெக்டர் அலு வலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டமும் நடத்திச் சென்றனர்.

அதேபோல் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் பள்ளிக் கல்வித்துறை லேப்டாப் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை மாணவர்களுக்கு இன்னமும் தெளிவுப டுத்தாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளி மாண வர்கள் 30பேர் பெரம்பலூர் கலெக்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் கலெக்டரிடம் தங்களுக்கு விரைந்து லேப்டாப் வழங்கும்படி கேட்டு கோரிக்கை மனுகொடுத்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...