×

ஆரதஹள்ளி பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காரிமங்கலம், ஜூலை 16: காரிமங்கலம் அருகே ஆரதஹள்ளி பிரிவு சாலையில், விபத்தை தடுக்க ரவுண்டானா மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரிமங்கலம் அடுத்த ஆரதஹள்ளி பிரிவு சாலையில், தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பிரிவு சாலையில், காரிமங்கலம் வெள்ளிசந்தை சாலை, பாலக்கோடு- காவேரிப்பட்டணம் சாலை, பாலக்கோடு - காரிமங்கலம் ஆகிய சாலைகள் பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் தினம் தோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கரும்பு லோடு ஏற்றி கொண்டு, ஏராளமான லாரிகள் மற்றும் டிராக்டர்கள் இச்சாலை வழியாக பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று வருகிறது. இந்த பிரிவு  சாலையில், ரவுண்டானா இல்லாததால் எதிரே வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் மின் வெளிச்சம் இல்லாததால், இரு வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். ரவுண்டானா மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த, நெடுஞ்சாலைதுறை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை. எனவே, இனியும் தாமதம் செய்யாமல், பிரிவுசாலையில் வேகத்தடைகள் அமைத்து, ரவுண்டானா மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா