×

விவசாயியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூலை 16:  தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பாறைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணன்(29). இவர், காவேரிப்பட்டணம் அருகே மிட்டஹள்ளி பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 2 பேர், சரவணன் அருகே சென்று அவர் சட்டைப்பையில் வைத்திருந்த 1000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட சரவணன், அங்கு நின்றிருந்தவர்கள் உதவியுடன் 2 பேரையும் மடக்கி பிடித்தார். பின்னர், இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த பாபு(40), அப்பாசாமிநாயுடு தெருவைச் சேர்ந்த மணி(52) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து, சிறையிலடைத்தனர்.

போதையில் வியாபாரியை
தாக்கிய 2 வாலிபர்கள் கைதுபோச்சம்பள்ளி, ஜூலை 16:  மத்தூர் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் மாது(50). பழ வியாபாரியான இவரிடம், நேற்று முன்தினம் களர்பதியைச் சேர்ந்த தேன்தமிழ்(24), மோகன்(25) மற்றும் செந்தமிழ்(27) ஆகியோர் சென்று கொய்யா பழம் கேட்டனர். குடிபோதையில் இருந்த அவர்கள், விலை அதிகமாக உள்ளதாக கூறி தகராறு செய்துள்ளனர். விலையை குறைக்க முடியாது என கூறிய மாது, பழத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதில், ஆத்திரமடைந்த 3 பேரும், அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளனர். இதில், மண்டை உடைந்து காயமடைந்த மாது, ரத்தவெள்ளத்தில் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து தேன்தமிழ், மோகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான செந்தமிழை தேடி வருகின்றனர்.

மணல் கடத்திய
டிரைவர் கைதுதேன்கனிக்கோட்டை, ஜூலை 16:  அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தக்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டரை பிடித்து விசாரித்தனர். இதில், உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து, தக்கட்டியைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ்(27) என்பவரை கைது செய்த போலீசார், ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு