×

ஆன்லைன் முறையில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய பயிற்சி

நாமக்கல், ஜூலை 16:  நாமக்கல்லில், உற்பத்தி செய்த பொருட்களை எவ்வாறு ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது என்பது குறித்து இலவச கருத்தரங்கு மற்றும் பயிற்சி நேற்று நடைபெற்றது.தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், நாமக்கல் மாவட்ட சிறுகுறு தொழில் கூட்டமைப்பு சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற கருத்தரங்கம், நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, ஏராளமான தொழில் முனைவோர்களும், புதிய தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சிறுகுறு தொழில் கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ வாழ்த்துரை வழங்கினார்.  கருத்தரங்கில் பங்கேற்ற தொழில் முனைவோர் ஆலோசகர் ஜெய்சங்கர், உற்பத்தி செய்த பொருட்களை எவ்வாறு ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தி, விற்பனை செய்து குறித்தும், அதில் நிலவும் சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மத்திய, மாநில அரசுகள் தொழில் முனைவோர்களுக்கு வழங்கும் மானியம் குறித்து விளக்கினார். தொடர்ந்து தியாகு, ராஜூ மற்றும் அருண் ஆகியோர், இளைய தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டமைப்பின் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி