முதிர்ந்த நெசவாளருக்கு தொடர்ந்து ஓய்வூதியம் பட்டாலியன் போலீசாருக்கு செயல்முறை விளக்கம்

திண்டுக்கல், ஜூன் 21: சின்னாளபட்டி நகர் நல- பொதுமக்கள் நல்லுறைவு வளர்ப்பு குழு தலைவர் ராமசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.அந்த மனுவில், ‘சின்னாளபட்டியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் பல கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. சங்கத்தில் கைத்தறி நெசவு வேலை செய்து வரும் வயது முதிர்ந்த கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 வழங்கி வந்தது. தற்போது கடந்த 6 மாதங்களாக அந்த ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் ஏழை கைத்தறி நெசவாளர்கள் சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே கைத்தறி நெசவாளர்களின் நலன் கருதி ஓய்வூதியத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : weaver ,
× RELATED ஓய்வு அதிகாரி வீட்டில் 12 பவுன் கொள்ளை