ஓசூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ஓசூர், ஜூன் 19: கிருஷ்ணகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா திண்ணூர் பெஸ்ஸோ குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் திண்ணூர் பகுதியில் உள்ள பெஸ்ஸோ ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில், முன்னாள் நகரமன்ற தலைவர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு இலக்கிய அணி பொருளாளர் ஆனந்தன், நெசவாளர் அணி அமைப்பாளர் சுந்தரராஜ், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் நந்தகோபால், நாராயணப்பா, ஆனந்தய்யா, கேன்டீன் விநாயகம், ஒன்றிய பொருளாளர் சுரேஷ், கணேசன், சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா: 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்