×

செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் குடிநீர் கேட்டு வழங்கக்கோரி சாலை மறியல்: அரசு பஸ் சிறைபிடிப்பால் பரபரப்பு

செங்கம் ஜூன் 19: செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ேடார் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கிணறுகள், ஏரி, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று செங்கம்- குப்பநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தகவலறிந்த டிஎஸ்பி குத்தாலிங்கம், பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, சஞ்சீவகுமார் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Senthil ,village ,Paramannal ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...