×

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் குடிநீர் தட்டுப்பாடு போராட்டம் எதிரொலி கீழக்கணவாய் கிராமத்துக்கு விசாரணைக்கு சென்ற அலுவலரின் கார் சிறைபிடிப்பு உத்தரவாத கடிதம் கொடுத்ததால் பொதுமக்கள் விடுவித்தனர்

பெரம்பலூர், மே 25:  கீழக்கணவாய் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நடத்திய போராட்டம் எதிரொலியால் விசாரணைக்கு வந்த பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை காரை சிறை பிடித்தனர். குடிநீர் பிரச்னையை 25ம் தேதிக்குள் தீர்ப்பதாக எழுதி கொடுத்த பிறகே ஜீப்போடு பொதுமக்கள் விடுவித்தனர்.பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது வேலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ளது கீழக்கணவாய் கிராமம். இங்கு 2,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்குமுன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த பிரச்னை தொடர்பாக நேற்று விசாரிப்பதற்காக பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முரளி என்பவர் காரில் சென்றார். அப்போது அவரை காலி குடங்களுடன் சுற்றி வளைத்த கீழக்கணவாய் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள், முறையற்ற குடிநீர் விநியோகம் தொடர்பாக சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதற்கு அரைமணி நேரத்தில் சமாளித்து பதில் அளித்து விட்டு புறப்பட தயாரான வட்டார வளர்ச்சி அலுவலர் முரளியை அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன் காரை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். பிறகு அவர்கள் தங்கள் பகுதி குடிநீர் பிரச்னைக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டுமென கூறினார்.பின்னர் கீழக்கணவாய் கிராமத்தின் ஆதிதிராவிடர் தெருவில் 350 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் கடந்த 8 மாதமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து வேலூர் ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று (24ம் தேதி) காலை 10.30 மணியளவில் எங்கள் தெருவுக்கு பார்வையிட வந்த பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கீழக்கணவாய் ஆதிதிராவிடர் தெரு பொது மக்கள் அனைவரும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு குறைகளை எடுத்து கூறினோம்.

அதற்கு வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் 116 காவிரி குடிநீர் இணைப்புகளை வழங்ககோரி நேரில் கோரிக்கை விடுத்தும், மனுவாக எழுதியும் கேட்டு கொண்டோம். அவர் உடனடியாக கோரிக்கையை ஏற்று வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குடிநீர் பிரச்னையை சரி செய்து நிறைவேற்றி தருவதாக சுய நினைவுடன் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்பேரில் நாங்கள் முற்றுகையை கைவிட்டோம் என எழுதி கையெழுத்துகளை போட்டு கொடுத்தனர்.இதையடுத்து பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் எழுதி கொடுத்த பதில் கடிதத்தில், வேலூர் ஊராட்சி கீழக்கணவாய் கிராமத்தில் வரும் 26ம் தேதி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். அவ்வாறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்ற முடியவில்லை யென்றால் டேங்க் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. 116 இணைப்புகள் வழங்கப்படும், குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்று எழுதி கையெழுத்து போட்டு பொதுமக்களிடம் கொடுத்தார். அதன்பிறகு பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளியின் வாகனத்தை பொதுமக்கள் விடுவித்தனர்.

Tags : activists ,public ,Echo ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...