×

அரூர் தொகுதியில் சுற்று வாரியாக வாக்குகள் விவரம்

அரூர், மே 25:அரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார், அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் சுற்று வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

1.திமுக 3025-அதிமுக 6090, 2.திமுக 3715-அதிமுக 5150, 3.திமுக 3228- அதிமுக 5604, 4.திமுக 4897-3827, 5.திமுக 4499-அதிமுக 4145, 6.திமுக 4693-அதிமுக 3434, 7.திமுக 3725-அதிமுக 4471, 8.திமுக 3428-அதிமுக 3223, 9.திமுக 3034-அதிமுக 4247, 10.திமுக 3092, அதிமுக 5110, 11.திமுக 4036-அதிமுக 4383, 12.திமுக 3215-அதிமுக 3664, 13.திமுக 3046-அதிமுக 2845, 14.திமுக 2431-அதிமுக 3849, 15.திமுக 2981-அதிமுக 3699, 16.திமுக 2677-அதிமுக 3554, 17.திமுக 4619-அதிமுக 3421, 18.திமுக 3031-அதிமுக 3648, 19.திமுக 3878-அதிமுக 2732, 20.திமுக 3398-அதிமுக 3749, 21.திமுக 3549-அதிமுக 3176, 22.திமுக 1559-அதிமுக 1182.

இறுதிச்சுற்று முடிவில் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் 9,529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.  தபால் வாக்கினை பொறுத்தவரை திமுக வேட்பாளர் 910 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். ஆனால், அதிமுக வேட்பாளருக்கு 350 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், அமமுக வேட்பாளர் முருகனுக்கு 377 தபால் வாக்குகள் கிடைத்தது. சுற்றுவாரியாக 4,5,6,8 மற்றும் 17வது ரவுண்டுகளில் அதிமுக வேட்பாளரை விட, திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார். இதனால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை நழுவ விட்டுள்ளார்.

இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டாவுகு அதிக வாக்குகள் கிடைத்துள்ளளது. அதன்படி, 1வது சுற்றில் 143, 2வது சுற்றில் 146, 3வது சுற்றில் 138, 4வது சுற்றில் 53, 5வது சுற்றில் 89, 6வது சுற்றில் 67, 7வது சுற்றில் 86, 8வது சுற்றில் 67, 9வது சுற்றில் 76, 10வது சுற்றில் 76, 11வது சுற்றில் 80, 12வது சுற்றில் 82, 13வது சுற்றில் 77, 14வது சுற்றில் 92, 15வது சுற்றில் 117, 16வது சுற்றில் 97, 17வது சுற்றில் 119, 18வது சுற்றில் 65, 19வது சுற்றில் 69, 20வது சுற்றில் 137, 21வது சுற்றில் 116, 22வது சுற்றில் 37 வாக்குகள் நோட்டாவுக்கு அளித்துள்ளனர்.
 
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிகபட்சமாக ஓசூரில் 4262 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்தப்படியாக பாப்பிரெட்டிப்பட்டியில் 2294 வாக்குகளும், அரூர் தொகுதியில் 2064 வாக்குகளும் நோட்டாவுக்கு போட்டுள்ளனர்.

Tags : Aroor ,district ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை