×

பாப்பிரெட்டிப்பட்டியில் 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 25: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 53,515 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் கோவிந்தசாமி உள்பட 11 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 3,478 வாக்குகள் பதிவாகியிருந்தது.

இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 3,013 பேரும், பெண்கள் 1 லட்சத்து 454 பேரும் அடங்குவர். நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். இறுதியில் ஒரு லட்சத்தி 974 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மணிக்கு 83 ஆயிரத்து 165 வாக்குகள் கிடைத்தது.

இதேபோல், அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் 14 ஆயிரத்து 769 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சதீஷ் 3,680 வாக்குகளும் பெற்றிருந்தனர். சுயேச்சை வேட்பாளர்களான அ.கோவிந்தசாமி, சு.கோவிந்தசாமி, மணி, முருகன், சி.ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோருக்கு இரட்டை வாக்குகளே கிடைத்தது. இதன்மூலம் திமுக, அதிமுக வேட்பாளர்களை தவிர மற்ற 9 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா