×

அரசு மருத்துவமனை பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

தர்மபுரி, மே 25: தர்மபுரி-சேலம் மெயின் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை எதிரே, கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அரசு தலைமை மருத்துவனை எதிரே, சேலம் மெயின் ரோட்டில் சர்க்யூட் ஹவுஸ் முதல் எஸ்பி அலுவலகம் வரை, பல வருடங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. மழை காலங்களை தவிர மற்ற நாட்களில் கழிவுநீர் வரத்து இல்லாததால், சர்க்யூட் ஹவுஸ் முதல் கலெக்டர் அலுவலகம் வழியாக எஸ்பி அலுவலகம் முன்பு வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால் மண் மூடி தூர்ந்து போய் காணப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘லேசான மழை பெய்தாலே இப்பகுதியில் தண்ணீர் தேங்கி விடும். தற்போது, கோடை மழைக்கே அவ்வப்போது தண்ணீர் தேங்கி வரும் நிலையில், மழைக்காலத்தின்போது அதிகளவில் தண்ணீர் தேங்கும். தர்மபுரியில் முக்கிய போக்குவரத்து கேந்திரமான சேலம் சாலையில் தண்ணீர் தேங்கும்பட்சத்தில் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சர்க்யூட் ஹவுஸ் முதல் எஸ்பி அலுவலகம் வரை சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஒட்டப்பட்டி பகுதியில் கழிவுநீர் முறையாக வெளியேற வழி வகை செய்ய வேண்டும்,’ என்றனர்.

Tags : area ,Government Hospital ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...