×

சூறைக்காற்றால் விழுந்த மரம் அகற்றப்படுமா?

சின்னமனூர், மே 23: சின்னமனூரில் சூறைக்காற்றால் சாலையில் விழுந்த மரம் ஒரு வாரமாகியும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சின்னமனூரில் கடந்த வாரம் இரண்டாவது முறையாக வீசிய சூறைக்காற்றால் சில இடங்களில் மரம் விழுந்து பாதிப்படைந்தது. குறிப்பாக நகரிலுள்ள 5 வது வார்டில் வீடு முன்பாக வேப்பமரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் வேறு பாதை வழியே செல்லும் நிலை உள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாகியும் மரம் அகற்றப்படாதது குறித்து சின்னமனூர் நகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த மரத்தை அகற்ற சின்னமனூர் நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி