×

பொதுக்குழு கூட்டம்

மதுரை, மே 22: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், மதுரையில் நடந்தது. தலைவர் செல்லையா தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். அப்போது, ‘அரசு ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...