×

நீடாமங்கலம் பகுதியில் கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் அவதி

நீடாமங்கலம், மே 19:  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஏரிகள், குளங்கள், குட்டைகள் வறண்டு விட்டது. இதனால் நீடாமங்கலம் பகதிகளில் நிலத்தடி நீர் 250 அடிக்கும் கீழ் சென்று விட்டது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு ஒரு போகம் சாகுபடி கூட முழுமையாக விவசாயிகள் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடைமழை பெய்தது. ஆனால் நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக  வெயில் கொளுத்தி வருகிறது. அதே நேரத்தில்  கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் வற்றியதால் தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.

Tags : area ,Neemamangalam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி