×

காய்ச்சல், வயிற்று போக்கு ஏற்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் அறிவுரை

தா.பழூர், மே 17: காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக சிகிச்சை பெற்று கொள்ள வேண்டுமென டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், டயர், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, சிமென்ட் தொட்டியில் தேங்கியிருக்கும் தண்ணீரால டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே நீர் தேக்கி வைத்துள்ள பாத்திரங்களை கொசு புகுந்து முட்டை விடாதவாறு மூடி வைக்க வேண்டும். நீர் தேக்கி வைத்தால் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். சுய வைத்தியம் எடுத்து கொள்ளக்கூடாது. கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி பருக வேண்டும் என்றார். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன், ஜாகிர் உசேன், மண்டல துணை வட்டார  வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அல்லிராணி, மருத்துவ அலுவலர் சரவணன்,  சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, செவிலியர்கள், பணியாளர்கள்,  பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். தா.பழூர் ஊராட்சி செயலர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Tags : government ,Dengue eradication awareness camp ,health center ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...