×

ேசலம் மைய நூலகத்தில் 30 ஆண்டுகளாக ஓ.ஏ., பணியிடம் காலி: பணிகள் பாதிப்பதாக குமுறல்

சேலம், ஏப்.24: சேலம் மாவட்ட மைய நூலகத்தில் சுமார் 30 ஆண்டுகளாக அலுவலக உதவியாளர் எனப்படும் ஓ.ஏ., பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் பாதித்துள்ளது. சேலம் மாவட்ட மைய நூலகம், சேலம் அரசு கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ளது. இந்த நூலகம் கடந்த 1953ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 14லட்சத்து 156 புத்தகங்கள் உள்ளன. கடந்த 2010 வரையிலான கணக்கீட்டின்படி 52 ஆயிரத்து, 632 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு மிகப் பழமையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தினந்தோறும் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை விடுமுறை நாளை தவிர்த்து மற்ற நாட்களில் காலை, 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. ஆனால் இங்கு கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஓஏ., எனப்படும் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்ேவறு பணிகள் பாதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘1990ம் ஆண்டு வாக்கில் 7பேர் அலுவலக உதவியாளராக  இருந்துள்ளனர். அதன்பின்னர், இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.  தற்போது தினசரி ஊதியத்தில் சிலர் நியமிக்கப்படுகின்றனர். இந்த பணி நிரந்தரம் கிடையாது என்பதால் அவர்கள் வெகு நாட்கள், பணியில் நீடிப்பது இல்லை. இதனால் வழக்கமான பல்வேறு பணிகள் பாதிக்கிறது,’’ என்றனர்.

Tags : workshop ,OA ,Salem Center Library ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்