×

உள்ளாட்சி வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு

கிருஷ்ணகிரி, ஏப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. மறுப்புரைகள் தெரிவிக்க வருகிற மே மாதம் 2ம் தேதி கடைசி நாள் என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி வரைவு பட்டியல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், அதே போல், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தற்போது விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள், தங்களது கருத்துக்களை அல்லது மறுப்புரைகளை தெரிவிக்க விரும்பும் பட்சத்தில், அதனை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடமா, வருகிற மே 2ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு