×

என்ஆர் காங். வேட்பாளர் பிள்ளைச்சாவடியில் வாக்களிப்பு

பாகூர், ஏப். 19:பாகூர் தொகுதியில் மக்களவை தேர்தல் அமைதியாக நடந்தது. அனைத்து வாக்னர். அமைச்சர் கந்தசாமி மனைவியுடன் சென்று பனித்திட்டு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். காலாப்பட்டு: இதேபோல் காலாப்பட்டு பகுதியிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. புதுவை மக்களவை தொகுதி என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி சொந்த ஊரான பிள்ளைச்சாவடி ஆனந்த ரங்கப்பிள்ளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் வெற்றி பெற்றால் புதுவையின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்றார். தொடர்ந்து அவர், காலாப்பட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.       

Tags : Candidate ,
× RELATED மாநிலங்களவை தேர்தல் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு