வினோபா நகரில் மோதல் - பரபரப்பு

புதுச்சேரி,  ஏப். 19:  புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகரில் வாக்குபதிவு  நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த பூத்தை  இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நேற்று மதியம் எட்டி உதைத்ததாக  கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த காங்கிரசாரை தரக்குறைவாக பேசியதாக தகவல்  பரவியதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.போலீசாரின்  ஒருதலைபட்ச செயலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பதற்றம்  ஏற்பட்டது. பின்னர் உயர்அதிகாரிகள் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர்.  தொடர்ந்து சகஜமான நிலையில் வாக்குபதிவு நடந்தது.

× RELATED தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல் முதலிடத்துக்கு முன்னேறுமா நியூசிலாந்து?