×

கம்பத்தில் பாஜ செயலாளர் மீது வழக்குப்பதிவு

கம்பம், மார்ச் 22: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்சி கொடிக்கம்பங்கள், கட்சி விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடிக்கம்பங்கள் அகற்றப்படாத கட்சியினர் மீது வழக்கு பதிவும் செய்து வருகின்றனர். அதன்படி வடக்கு சுப்பிரமணியன் கோயில் தெரு பகுதியில் நேற்று சிறப்பு எஸ்ஐ சுப்பிரமணி ரோந்து செல்கையில், இப்பகுதியில் பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் அகற்றப்படாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொடிக்கம்பத்தை அகற்றிய கம்பம் வடக்கு போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக பாஜக நகரச்செயலாளர் வைரம்(23) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...