×

வீட்டுவரி, சொத்துவரி செலுத்த 23, 24ம் தேதிகளில் முகாம்கள்

புதுச்சேரி, மார்ச் 22:  புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 42 வார்டுகளில் உள்ள வீடுகள், கட்டிடங்களுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி நிலுவை மற்றும் நடப்பு ஆண்டு 2018-19 வரையிலான வரி பாக்கியை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி நகராட்சியின் நடவடிக்கை மற்றும் வட்டி, அபராத வட்டியை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி புதுவை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வீட்டுவரி, சொத்துவரி வசூல் மையங்களில் கடந்த 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையுள்ள விடுமறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டு, சொத்து வரியினை காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

நாளை மறுதினம் (23ம் தேதி) முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதி வீட்டுவசதி வசூல் மையம், கம்பன் கலையரங்கம் வீட்டுவரி வசூல் மையம், நெல்லித்தோப்பு வீட்டுவரி வசூல் மையம், முதலியார்பேட்டை மேரி வீட்டுவரி வசூல் மையம் ஆகிய வழக்கமாக நடைபெறும் மையங்களிலும், சிறப்பு வரி வசூல் மையமான தேங்காய்திட்டு அரசு உயர்நிலை பள்ளியிலும் முகாம் நடக்கிறது. வரும் 24ம் தேதி (ஞாயிறு) மேற்கண்ட வழக்கமாக நடைபெறும் மையங்களிலும், முருங்கப்பாக்கம் திரவுபதையம்மன் கோயில் கோயில் திடல் சிறப்பு வரி வசூல் மையத்திலும் முகாம் நடைபெறுகிறது.
மேலும், நடைமுறையில் உள்ள பொது வரிவிதிப்பின்படி நடப்பு மற்றும் நிலுவை வரி செலுத்துவதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி பாக்கிதாரர்கள் புதுச்சேரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனே செலுத்த அறிவுறுத்தப்படு கிறார்கள். பொதுமக்கள், வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி செலுத்த வரும்போது தங்களிடம் உள்ள பழைய வீட்டுவரி ரசீது, வீட்டுவரி கேட்பு அறிக்கையினை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தங்கள் வீட்டுவரி, சொத்து வரியை பாக்கியின்றி செலுத்தி, புதுச்சேரியை தூய்மையான நகரமாக்க ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறோம்.

Tags : Camps ,
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...