×

தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு அழைப்பு

அரியலூர், மார்ச் 22: தேர்தல் தொடர்பான புகார்களை அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர் துர்கா தத், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அறைகளை துணை இயக்குனர் (வருமான வரித்துறை)  கண்ணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தெரிவித்ததாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தகவல் கட்டுப்பாட்டு மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் மற்றும் ஊடக கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி தாள்கள்களுக்கான நடத்தை விதிகளான மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 121(அ)ன்படி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இ-பதிப்பு செய்தித்தாள்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு (விசிவிசி)-யிடம் முன்சான்றிதழ் பெறப்படவேண்டும். தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் செய்தித்தாளில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழுவிடம் முன்சான்றிதழ் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தின் விதிமுறைகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு மையமானது சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு 04329- 228605, 04329- 228606, 04329- 228607 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அரியலூர் மாவட்டத்தில் 6 பறக்கும்படை குழுக்கள், 6 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 2 வீடியோ பார்வை குழுக்கள், 2 கணக்கு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகளை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே மேற்கண்ட குழுக்கள் எங்கு செல்கின்றன என்பதை ஜிபிஆர்எஸ் உதவியுடன் நேரடியாக பார்வையிடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியாளர்கள், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் கடைபிடித்து நாடாளுமன்ற தேர்தலை அரியலூர் மாவட்டத்தில் சிறந்த முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். டிஆர்ஓ பொற்கொடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : public ,control room ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...