×

மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம்

ஜெயங்கொண்டம், மார்ச் 22: ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. மண்டல துணை தாசில்தார் மீனா வரவேற்றார். உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி, ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரையா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளி நபர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து வசதிகள், வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது குறித்து செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தலைமையிடத்து துணை தாசில்தார் பாஸ்கர், ஆண்டிமடம் தேர்தல் துணை தாசில்தார் சுசிலா, சமூக பாதுகாப்பு தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Tags : voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...